Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்வி பயில 4ம் கட்ட வழிகாட்டல் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர், ஜூலை 24: தஞ்சாவூர் மாவட்டம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளிப் படிப்பினை முடித்த மாணவ-மாணவியர்கள் உயர் கல்வி பயில்வதற்கான நான்காம் கட்ட வழிகாட்டல் சிறப்பு குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் பள்ளி படிப்பினை முடித்த மாணவ-மாணவியர்கள் உயர் கல்வி பயில்வதற்கான சிறப்பு குறைதீர் கூட்டம் 09.06.2025 முதல் நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக நான்காம் கட்ட கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் இன்று (23.07.2025) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியிலுள்ள மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த லாவண்யா என்ற மாணவி அதிராம்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயின்று பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 415 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற் றுள்ளார். மேற்படிப்பில் ஆர்வம் இருந்தும் பெற்றோரது கட்டாயத்தின் பேரில் குடும்ப சூழல் காரணமாக மாத வருமானத்திற்கு வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் அதிராம்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை பார்கவி உயர்கல்வி பயில முடியாத மாணவிகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் மாணவி லாவண்யாவின் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொண்டு மாணவியின் உயர்கல்வி குறித்து வலியுறுத்தி இவ்வழிகாட்டு நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தார் முதன்மைக் கல்வி அலுவலர் மாதவன். சஞ்ஜெய், பள்ளி ஆசிரியை மற்றும் வழிகாட்டு ஆசிரியர்களின் சீரிய முயற்சியால் பத்தே நிமிடங்களில் மாணவிக்கு அவரது வீட்டின் அருகாமையில் உள்ள அதிராம்பட்டினம் காதர்முகைதீன் கல்லூரியில் பி.காம் பிரிவில் சேர்க்கை பெற்று வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் இதேபோன்று மாணாக்கர்களது உயர்கல்விக்காக செயல்பட்டு வரும் அனைத்து ஆசிரியர்களின் முயற்சியை பாராட்டினார். மேலும், பன்னிரெண்டாம் வகுப்பு நிறைவு செய்த மாணாக்கர்களின் பெற்றோர்கள் அரசின் உதவியுடன் தங்களது பிள்ளைகளின் உயர்கல்வியினை உறுதி செய்திட ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொண்டார்.