தஞ்சாவூர், அக் 29: குறுவை கொள்முதல் பணிகளில் இன்னமும் சுணக்கம் தான் உள்ளது. அதை விரைவு படுத்த வேண்டும். மழையால் பாதித்த விவசாயிகளுக்கு உடன் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த கோட்ட அளவிலான குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். தஞ்சையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் வருவாய் கோட்டாட்சியரின் தலைமை உதவியாளர் தமிழரசி தலைமையில் நடந்தது
+
Advertisement


