ஒரத்தநாடு, செப்.24: ஒரத்தநாடு நெடுஞ்சாலைத்துறை திட்டப்பணிகள் குறித்து தஞ்சாவூர் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர் நெடுஞ்சாலை துறை கோட்டத்திற்கு உட்பட்ட ஒரத்தநாடு உட்கோட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வரு
கின்றன. இதன் ஒரு பகுதியாக வல்லம்-ஒரத்தநாடு சாலையில் இருந்து பிரிந்து செல்லும் வடக்கூர் சாலை சந்திப்பு மற்றும் கண்ணந்தங்குடி கீழையூரில் இருந்து ஒரத்தநாடு வரை செல்லும் சாலை ஆகிய சாலைகள் மேம்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டப் பணிகளை தஞ்சாவூர் கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்ரமணியம் ஆய்வு செய்தார். அப்போது, புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலைகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு தரத்தினை உறுதி செய்தார். இந்த ஆய்வின் போது ஒரத்தநாடு உதவி கோட்ட பொறியாளர் விவேகானந்தன், உதவிப்பொறியாளர் விஜய் ஆகியோர் உடன் இருந்தனர்.