தஞ்சாவூர், செப்.22: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சூழலியல் உபக்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது.
மாநில அரசின் தடையை மீறி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஷெல் ஆய்வு கிணறுகள் அமைக்கும் ஒன்றிய அரசு திட்டத்தை முதல்வர் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சூழலியல் உபக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் சேதுராமன் கூறுகையில்; தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக 2020ல் அறிவிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்துள்ள மத்திய எரிசக்தி இயக்குனரகத்தின் 2024-25ம் ஆண்டு அறிக்கையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை பொருட்படுத்தாமல் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.