கும்பகோணம், டிச.7: கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆடுதுறை துணை மின் நிலையத்தில் வரும் 9ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகம் பெறும் ஆடுதுறை, எஸ்.புதூர், நரசிங்கன்பேட்டை, ஆவணியாபுரம், கோட்டூர், கஞ்சனூர், திருலோகி, சாத்தனூர், சூரியனார்கோவில், திருவிடைமருதூர், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வருகிற செவ்வாய்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
+
Advertisement


