தஞ்சாவூர், டிச.7: தஞ்சாவூர் தொகுதிக்கு உட்பட்ட 49வது வார்டு முனிசிபல் காலனி 7ம் தெரு மற்றும் 40வது வார்டு யாகப்பா நகர் மற்றும் அருளானந்தமாள் நகரில் புதிதாக கட்டப்பட்ட பொது விநியோக கட்டிடங்களை திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் மற்றும் தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி நீலமேகம் ஆகியோர் திறந்து வைத்தனர். தஞ்சாவூர் தொகுதிக்கு உட்பட்ட வார்டு 49 முனிசிபல் காலனி 7ம் தெரு மற்றும் வார்டு 40 யாகப்பா நகர் மற்றும் அருளானந்தமாள் நகரில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 41.40 லட்சம் மதிப்பீட்டில் 3 பொது விநியோக கட்டிடங்கள் கட்டப்பட்டது. அதனை மக்கள் பயன்பாட்டிற்காக திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் மற்றும் தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி நீலமேகம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
+
Advertisement


