தஞ்சாவூர், டிச.7: பாபநாசம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் தியாக சமுத்திரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுகாதார கட்டிடம், சத்தியமங்கலம் ஊராட்சி வாழ்க்கை கிராமத்தில் 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையம், முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டமைப்பு திட்டம், பிரதமந்திரி வீடு வழங்கும் திட்டம் ஆகிய திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளையும் தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
+
Advertisement


