பேராவூரணி, டிச.6: பேராவூரணி பெரியார் சிலை அருகே தமிழ்நாட்டையும், தமிழர்களையும் பயங்கரவாதிகளாக சித்தரித்து பேசும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திக மாவட்ட செயலாளர் மல்லிகை சிதம்பரம் தலைமை வகித்தார். மாவட்ட காப்பாளர் அருநல்லதம்பி, மாவட்ட தலைவர் வீரையன், மாவட்ட துணைச் செயலாளர் சோமநீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
+
Advertisement

