தஞ்சாவூர், டிச.5: தொடர்மழை காரணமாக தஞ்சைக்கு காய்கறி வரத்து குறைந்ததால் தொடர்ந்து விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் அவரைக்காய் விலை மீண்டும் சதமடித்துள்ளது. கிலோ ரூ.110-க்கு விற்றதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். மேலும், தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
+
Advertisement

