தஞ்சாவூர்,செப்.16:தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.எனவே,தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர்,திருவையாறு,பூதலூர் மற்றும் ஓரத்தநாடு வட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறும் படி தஞ்சை கோட்டாட்சியர் நித்யா தகவல் தெரிவித்துள்ளார்.
+
Advertisement