ஒரத்தநாடு, செப்.15: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்திற்குட்பட்ட குலமங்கலம் கிராமத்தில் ஆதி திராவிடர் பொதுமக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாக போடப்பட்ட மண் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் இதுவரை மண்சாலையை தார் சாலையாக மாற்றி தர நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட கலெக்டர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தலையிட்டு தார்சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.