தஞ்சாவூர், செப். 30: திருக்கருகாவூர், மெலட்டூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள செடி, கொடிகள் அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம் பாபநாசம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட திருக்கருகாவூர், மெலட்டூர் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையோரத்தின் இருபுறமும் சீமை கருவேலமர முட்செடிகள் மற்றும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கின்றது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடும் போது சாலையோரத்தில் முட்செடிகள் இடையூறாக இருந்து வருகிறது. மேலும் வாகன ஓட்டிகளின் கண்களை மூட்கள் பதம்பார்க்கின்றன. எனவே பொதுமக்கள் நலன் கருதி திருக்கருக்காவூர், மெலட்டூர் தேசிய நெடுஞ்சாலை யோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வரும் சீமை கருவேல மரச்செடிகள் மற்றும் செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement