திருவையாறு, செப். 30: திருவையாறு அருகே கல்யாணபுரம் பகுதிகளில் தூய்மையே சேவை 2025 இயக்க விழா நடைபெற்றது. இதில் கல்யாணபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திரா, கீதா, கல்யாணபுரம் கிளை மேலாளர் நாத், வட்டார ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் ஸ்டாலின், உதவியாளர் சுரேஷ்குமார், ஊராட்சி உதவியாளர்கள் பாஸ்கர், வீரபாண்டியன், கல்யாணபுரம் கிளை ஊழியர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement