கும்பகோணம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் சார்ஜிங் ஸ்டேஷன் வசதி கோட்ட கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்
கும்பகோணம், டிச.11: இந்திய அஞ்சல்துறையில் கும்பகோணம் அஞ்சல் கோட்டத்தில், கும்பகோணம் தலைமை அஞ்சல் அலுவலகத்திற்கு பரிவர்த்தனைக்காக வரும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக, மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவரின் வழிகாட்டுதலின்படி, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சேவை வழங்கும் நோக்கில் மொபைல் சார்ஜிங் ஸ்டேஷன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் சார்ஜிங் ஸ்டேஷனை கும்பகோணம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் துவக்கி வைத்தார்.மேலும், பொதுமக்கள் இந்த வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அனைத்து விதமான கைபேசிகளுக்கும் பொருந்தும் வகையில் இந்த மொபைல் சார்ஜிங் ஸ்டேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்களும், அஞ்சலக ஊழியர்களும் கலந்து கொண்டனர்.


