தஞ்சாவூர், நவ 11: கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கொடுக்கும் திட்டத்திற்கான பணியை துரிதப்படுத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட கலெக்டர் இடம் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி சார்பில் நேற்று மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தின் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் 2022ம் ஆண்டு முதல் வீடு கட்டும் திட்டம் வீடு கொடுக்கும் திட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கணினியில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். அதில் இதுவரை 100க்கு மேற்பட்டவர்களுக்கு தாலுகாவில் என்ஓசி வாங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதுவரை 2022 ல் பதிவு செய்த 35 உறுப்பினர்களுக்கு மட்டும்தான் வீடு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.
அவர்களுக்கு அந்தந்த பகுதி தாலுகாவில் விரைவில் வீடு வழங்கவேண்டும். மேலும் தஞ்சை பகுதியில் அனைவருக்கும் வீடுகள் இல்லை. அதேபோல் வீடு கட்டும் திட்டத்தில் சில உறுப்பினர்களுக்கு தாலுகாவில் என்ஓசி வாங்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு டிஆர்டிஏ அலுவலகங்கள் தனி வங்கிகணக்கு தொடங்கி பணம், வாரியம் மூலம் பெற்று தர விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் 2025ம் ஆண்டு வரை சுமார் 7000 கோடி வாய்ப்பு நிதி உள்ளது. அந்த நிதியை பயன்படுத்தி தொழிலாளர்களுக்கு கனவு திட்டமான வீடு கொடுக்கும் மற்றும் வீடு கட்டும் திட்டத்திற்கான நிதியை வாரியத்தில் பெற்று தொழிலாளர்களுக்கு விரைவில் வீடு மற்றும் வீடு கட்ட நிதியை கொடுக்க வேண்டும். இவ்வாறு அதை கூறப்பட்டுள்ளது.
