திருப்பூர், ஜூலை 10: திருப்பூர் வடக்கு மாநகரத்துக்கு உட்பட்ட 24வது வட்ட கழகத்தில் 345 பூத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிர்ணயித்த இலக்கை வாக்குசாவடி சமூக வலைத்தள முகவர் சரவணமூர்த்தி 100 சதவீதம் மேற்கொண்டார்.
அவரை திருப்பூர் வடக்கு மாநகர பொறுப்பாளர் ஈ.தங்கராஜ் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இதில் வடக்கு மாநகர துணை செயலாளர்கள் ராமசாமி,தேவி முருகேசன், மாநகர பொருளாளர் சரவணன், வட்ட கழகச் செயலாளர் செல்வம், ராம்குமார் வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.