திருச்செங்கோடு, ஜூலை 8: திருச்செங்கோடு அருகே சக்திநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டங்காடு செல்லும் சாலையோரத்தில், மினி சின்டெக்ஸ் டேங்க், கடந்த 2022-23ம் ஆண்டு ஊராட்சி சார்பில் 15வது நிதி குழு மானியம் மூலம், 8 வீடுகளுக்கு தனிநபர் குடிநீர் இணைப்பு திட்டத்தின் மூலம், ரூ.1.34லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நீர்த்தேக்க தொட்டி, தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, அதனை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement