தொண்டி, நவ 23: தொண்டி பகுதியில் மழை நீரை வெளியேற்ற அதிகாரி தலைமையில் ஆய்வுப் பணி நடைபெற்றது. தொண்டியில் பெய்த கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகளான வட்டக்கேணி, அண்ணா நகர், புதுக்குடி போன்ற பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், பேரூராட்சி மன்ற தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் தலைமையில் திருவாடானை தாசில்தார் அமர்நாத், தொண்டி விஏஒ நம்பு ராஜேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் காளிதாஸ், பேரூர் கழகச் செயலாளர் இஷ்மத் நானா ஆகியோருடன் இணைந்து கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீரை அகற்றுவது தொடர்பாக பார்வையிட்டனர். மேலும் அப்பகுதிகளில் உள்ள மழை நீரை மோட்டார் இயந்திரம் மூலம் வெளியேற்றப்பட்டது.


