Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு

பெரம்பலூர்,ஜூலை 15: பெரம்பலூர் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கொடுக்கப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். மாவட்ட அளவில் 86 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் பேட்டி.

”உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் குறித்து விளக்கும் வகையில், பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று(14ம் தேதி) திங்கட்கிழமை கலெக்டர் அருண்ராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது :

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம், இன்று(15ம்தேதி) தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்கு, வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தளி அரசு பள்ளியிலும், நகர்ப்புற பகுதிகளுக்கு பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 1வது மற்றும் 2வது வார்டு பகுதிகளுக்கு, வடக்கு மாதவி சாலையிலுள்ள என்.எஸ்.கே திருமண மஹாலிலும், நடைபெற உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில்“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நகராட்சி பகுதிகளில் 08 இடங்களிலும், பேரூராட்சி பகுதிகளில் 09 இடங்களிலும், நகரமைப்பை ஒட்டியுள்ள பெரிய ஊராட்சிகளில் 05 இடங்களிலும், ஊராட்சி பகுதிகளில் 64 இடங்களிலும் என மொத்தம் 86 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. 105 சுய உதவிக் குழு தன்னார்வலர்கள் நகர்ப் புறங்களில் நடைபெற உள்ள முகாம்களிலும், 124 சுய உதவி குழு தன்னார்வலர்கள் ஊரகப் பகுதிகளில் நடைபெற உள்ள முகாம்களிலும் விண்ணப்பங்கள் வழங்கிட பணியமர்த் தப்பட உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய 4 நாட்களில் நாள் ஒன்றுக்கு 2 முகாம்கள் வீதம் ஒரு வாரத்திற்கு 8 முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் ஆதார் மையங்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட மையங்கள், மருத்துவ துறை சார்பாக மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு மையங்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சேவை வழங்க உள்ளனர். முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அனைத்து முகாம்களிலும் காவல்துறை மூலம் \”MAY I HELP YOU\” பூத் அமைக்கப்பட வுள்ளது. முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம் உள்ளிட்டைவைகள் குறித்து உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக ஒலிபெருக்கி கொண்டு பொதுமக்களுக்கு விளம்பரப் படுத்தப்பட்டு வருகின்றன.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 1,93,255 குடும்ப அட்டைதாரர்களில், 1,10,323 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ1,000 வழங்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 38,000 குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வேண்டி விண்ணப்பங்கள் வரப் பெற்றுள்ளன. தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் பட்டு மாதந்தோறும் ரூ1,000 வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை பெற்றுவருபவர்கள் வங்கிக்கணக்கு திருத்தம் உள்ளிட்ட இதர கோரிக்கைகளும் இந்த முகாம்களில் வருவாய்த் துறை மூலம் தனியே பரிசீலிக் கப்படும். எனவே பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொது மக்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின்” திட்டமுகாமில் பங்கேற்று, அரசு சேவைகள் பெற்றும், கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டும் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது எனத் தெரிவித்தார். பேட்டியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சொர்ணராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.