ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 23: ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் 6,7,8வது வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. அய்யம்பட்டி தெரு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான திருமணம் மஹாலில் நடைபெற்ற முகாமை நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் துவக்கி வைத்தார்.
இதில் நகர்மன்ற துணைத் தலைவர் செல்வமணி, ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் பாலமுருகன், நகராட்சி ஆணையாளர் பிச்சைமணி மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் கடந்த வாரம் 3, 4, 5வது வார்டுகளில் நடைபெற்ற முகாமில் 237 மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களும் இதர பிரிவில் இருந்து 213 விண்ணப்பங்களும் பெறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.