Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சீர்காழி அருகே காரைமேடு நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா

சீர்காழி, ஆக.12: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி காரைமேட்டில் பெஸ்ட் கல்வி நிறுவனத்தின்கீழ் இயங்கும்  நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளியின் 8ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் செயலர் ராஜ்கமல் தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் ஆதித்யா ராஜ்கமல் முன்னிலை வகித்தார். சீர்காழி நகர போக்குவரத்து எஸ்ஐ வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மனித வள மேம்பாட்டு பயிற்றுநர் பாபுநேசன், ரோட்டரி சங்க தலைவர் கணேஷ், புரவலர் முத்துகிருஷ்ணன், உடற் கல்வி ஆசிரியர்கள் முரளிதரன், செல்லதுரை , பெஸ்ட் மெட்ரிக் பள்ளி முதல்வர் ராமலிங்கம், துணை முதல்வர்கள் மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு பல்வேறு தடகள போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதேபோல் பெற்றோர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக பள்ளியின் முதல்வர் பழமலைநாதன் வரவேற்புரை ஆற்றினார். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். துணை முதல்வர் திலகவதி நன்றி கூறினார்.