Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷண பைரவர் சிறப்பு வழிபாடு

திண்டுக்கல் ஜூலை 29: தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் பரிவார மூர்த்தியாக உள்ள சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமியை யொட்டி சிறப்பு பூஜை பாலபிஷேகம் செய்வது வழக்கமான ஒன்று.

இவருக்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தேய்பிறை அஷ்டமியான நேற்று சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு இளநீர், தேன், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. கோயமுத்தூர், வெள்ளக்கோவில், திருப்பூர், ஈரோடு கரூர் பல்லடம் உடுமலைப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவரகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று அதிகாலை முதலே வழக்கத்திற்கு மாறாக அதிகமான பக்தர்கள் வருகை தந்து சொர்ண ஆகர்ஷண பைரவரின் ராஜ அலங்காரத்தை கண்டு மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, அறங்காவலர்கள் வாசுதேவன், கேப்டன் பிரபாகரன், ராமானுஜம், சுசிலா, மற்றும் செயல் அலுவலர் திருஞானசம்பந்தர் பட்டாச்சாரியார்கள் ராமமூர்த்தி, ரமேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.