காரிமங்கலம், ஜூன் 17: காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி தானப்பகவுண்டர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அஷ்ட வாராஹி அம்மன் கோயிலில், தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, நேற்று சிறப்பு ஹோமம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேங்காயில் தீபமேற்றி வழிபட்டனர். கோயிலில் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் நீலகண்ட சாஸ்திரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
+
Advertisement


