வேதாரண்யம், ஜூலை 10: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பேரூராட்சியில் வரும் முன் கண்டறிந்து நோய் வராமல் தடுக்க சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு சீயோன் ஜெப ஆலயத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை சீயோன் ஆலய நிர்வாகி சந்திரமோகன் துவக்கி வைத்தார்இம் முகாமில் இதய அடைப்பு, பக்கவாதம், சிறுநீரக செயல் இழப்பு, மூட்டு தேய்மானம், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வருவதற்கு முன்பாக கண்டறிந்து நோய் வராமல் தடுப்பதற்குரிய விழிப்புணர்வு அளிக்கபட்டது.
மனிதர்களுக்கு வர இருக்கும் உடல் சார்ந்த பிரச்சினைகளை கண்டறிந்து பக்க விளைவுகள் இல்லா இயற்கையான மூலிகைகளை கொண்டு இணை உணவுகளால் நோயை கட்டுப்படுத்தும் முறை பற்றி விளக்கமும், சிகிச்சையும் மருத்துவர் அன்பழகன் அளித்தார். முகாமில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான கலந்து கொண்டு பயன்பெற்றனர்.