விருதுநகர், ஜூலை 28: விருதுநகர் ஒன்றியம் இனாம்ரெட்டியபட்டி ஊராட்சியில், சமூக தணிக்கை கூட்டத்தில், 2024-25 நிதியாண்டில் நூறு நாள் வேலை திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளுக்கான சமூகத்தணிக்கை ஜூலை 21 முதல் ஜூலை 25 வரை வட்டார வள பயிற்றுநர் ஜெகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
அதற்கான சிறப்பு கிராம சபை கூட்டம் கூட்ட தலைவர் கிருஷ்ணவேணி தலைமையில் மாவட்ட வள அலுவலர் சின்னச்சாமி முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு கிராம சபையில் 15 தீர்மானங்கள் ஒப்புதல் பெறப்பட்டது. சிறப்பு கிராம சபை கூட்ட நடவடிக்கைகள் முதன் முதலாக விருதுநகர் இனாம் ரெட்டியபட்டி ஊராட்சியில் நிர்ணய செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
கிராம சபையில் வேலை அட்டை கோரி விண்ணப்பித்த 3 பேருக்கு புதிய வேலை அட்டை வழங்கப்பட்டது. ஊராட்சி செயலாளர் ஞானதுரை நன்றி தெரிவித்தார். நூறு நாள் வேலை திட்டப்பயனாளிகள் பலர் பங்கேற்றனர்.