ஈரோடு, ஜூலை 3: மாநில அளவிலான நீச்சல் போட்டியில் ஈரோடு, எஸ்.கே.சி.ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவி தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளார்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாநில அளவிலான நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி - 2025, ஓசூரில் நடைபெற்றது.
இதில், ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவி சுஜினி கலந்துகொண்டு 2 தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம், 2 வெண்கல பதக்கங்கள் மற்றும் 6 சான்றிதழ்களும் பெற்றுள்ளார். 2ம் வகுப்பு படிக்கும் அவரது தங்கை புகழினி ஒரு வெள்ளிப் பதக்கமும், சான்றிதழும் பெற்றுள்ளார்.வெற்றி பெற்ற இருவரும் நேற்று பள்ளித்தலைமை ஆசிரியை சுமதியிடம் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.அவர்களை பள்ளியின் ஆசிரியர்களும், மாணவ, மாணவிகளும் வாழ்த்தினர்.