கோவை, ஜூலை 23 : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் தேர்வு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். இக்கட்சியின் கோவை மாவட்ட செயலாளராக சிவசாமி என்பவர் பதவி வகித்து வருகிறார்.
இவரது பதவிக்காலம் நிறைவடைய இருந்த நிலையில், கடந்த 20ம் தேதி பெ.நா.பாளையம் பகுதியில் நடைபெற்ற அக்கட்சியின் 25வது கோவை மாவட்ட மாநாட்டில் சிவசாமி மீண்டும் மாவட்ட செயலாளராக அக்கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் தேர்வு செய்யப்பட்டார்.
இதேபோல், இம்மாநாட்டில் 45 பேர் கொண்ட புதிய மாவட்ட குழுவும் தேர்வு செய்யப்பட்டது. வரும் 1ம் தேதிக்கு பின்னர் மற்ற மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்வு நடைபெறும் எனவும், அதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.