பரமக்குடி, ஆக. 30: பரமக்குடி நகராட்சியில் 60, கிராம பகுதிகளில் 20 விநாயகர் சிலைகள் உள்பட 80 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கணபதி ஹோமம் பழக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பெண்களின் திரு விளக்கு வழிபாடு, உறியடி, வினாடி வினா, விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மாலை 5 மணிக்கு பரமக்குடி, எமனேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் புறப்பட்டு சவுராஷ்டிரா மேல் நிலைப்பள்ளி அருகில் சென்றடைந்தது. மாவட்ட பொதுச் செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் மாநில பேச்சாளர்கள் கங்காதரன், ரத்தின சபாபதி, மாவட்ட பொருளாளர் ஆதித்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நகர் தலைவர் குமரன் வரவேற்க மாலை 6 மணிக்கு துவங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சுந்தரராஜ பெருமாள் கோயில் முன்பு வைகை ஆறு படித்துறையை அடைந்தது. அங்கு அனைத்து விநாயகர் சிலைகளும் ஆற்றில் கரைக்கப்பட்டது. பரமக்குடி டிஎஸ்பி சபரிநாதன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
+
Advertisement