திருப்புவனம், ஆக.29: திருப்புவனம் சௌந்திரநாயகி புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருப்புவனம் தலவரலாறு குறித்த திருப்ப பூவணத் திரட்டு எனும் நூல் வெளியீட்டு விழா நடந்தது. நூலை மதுரை முருகவேள் பன்னிரு திருமுறை ஆய்வு மையம் சார்பில் பதிப்பிக்கப்பட்டது. முதல் நூலினை கோவில் கண்காணிப்பாளர் தண்ணாயிரம் வெளியிட்டார். கோவில் சிவாச்சரியார்கள் பெற்றுக் கொண்டனர். முருகவேள் பன்னிரு திருமுறை ஆய்வு மைய நிறுவனர் சிவதனுஷ் இலக்கிய உரை நிகழ்த்தினார். வேலப்ப தேசிகர் திருக்கூட்டம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
+
Advertisement