Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிலம்ப போட்டியில் மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி

மானாமதுரை, ஆக.29: தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பாக வருவாய் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஒற்றைக்கம்பு பிரிவில் அகதீஸ்குமார், மதன்குமார், சுவாதி, ஷாலினி முதல் இடத்தையும், ஆதித்யா, ஹரிணி இரண்டாம் இடத்தையும், இரட்டைக்கம்பு பிரிவில் ரித்தீஷ், புகழேஷ், ரோஷினி, முதல் இடத்தையும், அரிபாலா, ஹர்ஷிதா இரண்டாம் இடத்தையும், தொடுமுறை பிரிவில் கரண், ஷெரோன் முதல் இடத்தையும், சூர்யா மூன்றாம் இடத்தையும் பெற்று தொடர்ந்து 3 முறை தமிழக அளவில் அந்தஸ்து பெற்று 4 ஆவது முறையாக மாநில சிலம்ப போட்டிக்கு தகுதி பெற்றனர். பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ,மாணவிகளையும் பெற்றோர்களும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.