Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வாலிபருக்கு அரிவாள் வெட்டு

காரைக்குடி, செப். 25: காரைக்குடி கேஎம்சி காலனியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (20). இவருக்கும் சத்யா நகர் பகுதி இளைஞர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை உதயம் நகர் பகுதியில் நடந்து சென்ற சுரேஷ்குமாரை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு டூவீலரில் தப்பி ஓடி தலைமறைவாகினர். படுகாயம் அடைந்த சுரேஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.