சிவகங்கை, செப். 25: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரகவளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாக்கியராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். மதுரை மாவட்ட செயலாளர் ஜோதிபாசு சிறப்புரை ஆற்றினார். இதில், தூய்மை காவலர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இதில் மாநில மகளிர் இணைச் செயலாளர் மீனாட்சி, மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், தூய்மை காவலர்கள், கணினி உதவியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் மக்கள் பணியாளர்கள் உட்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர். சிவகங்கை நிர்வாகி ராஜீவ்காந்தி நன்றி கூறினார்.