ராமநாதபுரம், ஆக.22: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்த மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவரையும் ஆங்கிலத்துறை பேராசிரியை முனைவர் ஆர்.கவிதா வரவேற்று பேசினார். கல்லுாரி முதல்வர் முனைவர் பெரியசாமி முன்னிலை வகித்தார். கல்லூரி தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமை வகித்து பேசுகையில்: அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு கல்லுாரியில் உள்ள சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார். மேலும் கல்லூரியில் பணிபுரிந்து வரும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரையும் மாணவ,மாணவிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். எங்களது கல்லூரியில் ஒழுக்கத்துடன் கூடிய கல்வி, அனுபவமிக்க பேராசிரியர்கள், நல்ல காற்றோட்டமான வகுப்பறைகள் மற்றும் உயர்தரமிக்க ஆய்வகங்கள் மற்றும் நுாலகங்கள் அனைத்தும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. அதனை நீங்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தை வளர்த்துக் கொள்வதன் மூலம் சிறந்த புலமையை பெற முடியும் என்றும் எடுத்துரைத்தார். விழாவின் முடிவில் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெயலெட்சுமி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் சிறப்பாக செய்திருந்தனர்.
+
Advertisement