தேவகோட்டை, ஆக.22: தேவகோட்டை தாலுகா, புளியால் ஊராட்சி, திடக்கோட்டை ஊராட்சி, மனைவிக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. காரைக்குடி சட்டமன்றத் உறுப்பினர் மாங்குடி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் ,ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் பூபாலசிங்கம் மற்றும் வட்டாட்சியர் சேது நம்பு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மகளிர் உரிமை தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.
+
Advertisement