சிவகங்கை, ஆக.22: தேவகோட்டையில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் 700க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒற்றை சிலம்பம், இரட்டை சிலம்பம், தொடு போட்டி உள்ளிட்ட பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் சிவகங்கை அருகே இடையமேலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 5ம் வகுப்பு மாணவன் சிவபாலா ஒற்றை சிலம்பம் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார். இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்ற சிவபாலாவை வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஜெயா,ஜான் சார்லஸ், ஆலிஸ் மேரி, தலைமையாசிரியர் லெட்சுமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
+
Advertisement

