சிவகங்கை, செப். 13: சிவகங்கை மாவட்டத்தில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 முன்னிட்டு அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை மற்றும் கதை சொல்லுதல் ஆகிய போட்டிகள் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் நடந்தது. சிவகங்கை மண்டல இணைப்பதிவாளர் கோ.ராஜேந்திர பிரசாத், சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து வழிகாட்டுதலின்படி நிகழ்ச்சி நடந்தது. இதில், சிவகங்கை மண்டல இணைப்பதிவாளர் அலுவலக துணைப்பதிவாளர்/பணியாளர் அலுவலர் ஜெயசங்கரி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் நடேசன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் குமரேசன் கலந்து கொண்டனர்.
+
Advertisement