சிவகங்கை, ஆக. 13: சிவகங்கை அருகே கொட்டக்குடி கண்மாய் பகுதியில் ஒட்டகுளம் சந்தோஷ்குமார்(25), கீழவாணியங்குடி பூபதி(29), வைரம்பட்டி பால்பாண்டி(26), கோவானூர் அழகுராஜா (எ) அலெக்ஸ் (24), வைரம்பட்டி அஜித்குமார்(29) ஆகியோர் 2.5 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தனர். இதையடுத்து, அவர்களை சுற்றி வளைத்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து பால்பாண்டியை கைது செய்தனர். தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
+
Advertisement