மண்டபம்,ஆக.7:மண்டபம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் டி.நகர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். 5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பள்ளி வளாகம் அமைந்துள்ளது. பள்ளி வளாகத்தின் பின்புறம் கருவேலம் மரங்கள் நிறைந்த காடுகள் உள்ளது. அதுபோல மழை காலங்களில் பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தேங்கும் மழைநீர் கழிவு குப்பைகளுடன் சேர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ளே வழிந்தோடி குளம்போல் காட்சியளிக்கும். இதனால் தொற்று நோய்கள் பரவும் வாய்ப்புகள் உள்ளது.மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கூடாரமாக மாறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆதலால் பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவர் இல்லாத பகுதிகளுக்கு மாணவிகளின் பாதுகாப்பு கறுதி சுற்றுச்சுவர் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement