காரைக்குடி, செப்.2: காரைக்குடியில் வீறுகவியரசர் முடியரசர் அவைக்களம் சார்பில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்பித்தல் போட்டிகள் நடத்தப்பட்டது. செயலாளர் ஸ்டீபன் மிக்கேல் ராஜ் வரவேற்றார். அவைக்கள நிறுவனர் பாரிமுடியரசன் தலைமை வகித்தார். தாசில்தார் ராஜா துவக்கி வைத்தார். துணைச்செயலாளர் கவுதமன் மற்றும் ஆட்சிக்குழுவினர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். இணைச் செயலாளர் முனைவர் வனிதா நன்றி தெரிவித்தார். போட்டிகளில் தொடக்கப்பள்ளி மாணவர்கள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement