ராமநாதபுரம், செப்.18: ராமநாதபுரம் மாவட்டத்தில் தும்படைக்காகோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாவட்ட கூட்டுறவு ஒன்றியமும், மதுரை மாவட்ட கூட்டுறவு பயிற்சி நிலையமும் இணைந்து உறுப்பினர் கல்வி திட்ட முகாம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் மதுரை கூட்டுறவு பயிற்சி நிலைய பேராசிரியர் அழகுபாண்டியன், கூட்டுறவுத்துறையில் மக்களுக்கு கிடைக்கும் நலத்திட்டங்களை தெளிவாக எடுத்துரைத்தார். உறுப்பினர்கள் அனைவரும் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனை உரிய நேரத்தில் செலுத்துவதாகவும், சிறு தொகையாக இருந்தாலும் கூட்டுறவு வங்கியில் இட்டு ைவப்பு ெசய்வதாகவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ராநாதபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் காளிதாஸ் சிறப்புரை ஆற்றினார். முடிவில் கூட்டுறவு ஒன்றிய மேலாளர் ராஜேஸ்வரி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் கடன் சங்கத்தின் செயலாளர் சசிக்குமார் மற்றும் சங்க பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
+
Advertisement

