சிவகங்கை, ஆக.18: சிவகங்கை அருகே பாகனேரியில் தமிழ்நாடு மஞ்சுவிரட்டு பேரவை சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நிறுவனத் தலைவர் சூர்யாசேதுபதி தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் செல்வகணேசன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் மனோஜ்குமார், பொருளாளர் பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதில், மாவட்டம் தோறும் அனைத்து வசதிகள் கொண்ட கால்நடை மருத்துவமனை அமைத்திட வேண்டும். வடமாடு, வெளிவிரட்டு, மஞ்சுவிரட்டுக்கு தனித் தனி விதிமுறைகள் வரையறுக்க வேண்டும். வீர விளையாட்டுக்களுக்கு அரசு காப்பீடு பதிவு செய்து விபத்து விபத்துகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.மலை பிரதேசங்களில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்வதை அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.