சிவகங்கை, அக். 17: டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: 2025-2026ம் நிதியாண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் மற்றும் பட்டியல் இனமக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்யும் ஆதிதிராவிடர் இனத்தைச்சார்ந்த தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோர்க்கு வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களுடன், 28.11.2025ம் தேதிக்குள் நேரில் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
+
Advertisement