திருப்புத்தூர், அக். 17: திருப்புத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பள்ளி மாணவர்களுக்கான தீபாவளி பண்டிகை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.திருப்புத்தூர் தீயணைப்புத்துறையும், ஆறுமுகநகர் அரிமா சங்கமும் இணைந்து நடத்திய இப்பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாரதிதாசன் தலைமை வகித்தார். அரிமா சங்கத் தலைவர் பிளாசா ராஜேஸ்வரி சேகர் முன்னிலை வகித்தார். தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை அலுவலர் ராஜா பாதுகாப்பான முறையில் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்கவும், விபத்து ஏற்பட்டால் பாதுகாத்து கொள்வது எப்படி என்று செயல்முறை விளக்கமளித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் அரிமா மாவட்டத் தலைவர் அழகுகுமார், மண்டலத்தலைவர் அழகுசுந்தரம், வட்டாரத் தலைவர் அபுதாகிர், மற்றும் மருத்துவர் இந்துமதி, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement