பரமக்குடி,செப்.17: பரமக்குடியில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு பரமக்குடி நகர் இளைஞர் அணி சார்பாக மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பரமக்குடி எம்எல்ஏ அலுவலகத்தில், அண்ணாவின் பிறந்தநாள் விழா பரமக்குடி தெற்கு நகர் இளைஞரணி சார்பில் கொண்டாடப்பட்டது. அண்ணாவின் உருவப்படத்திற்கு தொகுதி பொறுப்பாளர் கொடி சந்திரசேகரன், நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி ஆகியோர் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா, இளைஞர் அணி அமைப்பாளர் துரைமுருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்பத் அணி அமைப்பாளர் ஜோசப் குழந்தை ராஜா, நகர் மன்ற உறுப்பினர் பிரபா சாலமன், தெற்கு நகர் இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாஸ்கரன், தினேஷ், பாலமுருகன் உட்பட வார்டு செயலாளர், வார்டு பிரதிநிதிகள் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement