திருப்புத்தூர், செப்.17: திருப்புத்தூரில் நேற்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது. திருப்புத்தூரில் நேற்று காலை முதலே அதிகமான வெயிலின் தாக்கம் இருந்தது. இந்நிலையில் மாலை 5 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் 5.45 மணியளவில் லேசாக ஆரம்பித்த மழை இடி, மின்னலுடன் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழையாக பெய்தது. மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டவாறு சென்றது. மழையின் காரணமாக மின்தடை ஏற்பட்டது. காலை முதலே அதிகமான வெப்பத்தில் தவித்த மக்கள் குளிர்ந்த காற்று மழை பெய்ததில் மகிழ்ச்சி அடைந்தனர்.
+
Advertisement