ராமநாதபுரம்,செப்.16: ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் படத்திற்கு வனம் மற்றும் கதர் கிராமத் தொழில் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடி உறுப்பினர் குடும்பத்தாருடன் இணைந்து தமிழ்நாட்டை தலை குனிய விட மாட்டோம், வாக்காளர் பட்டியல் திருட்டு, நீட், இந்தி திணிப்பு உள்ளிட்ட நாடு மற்றும் தமிழக நலனுக்கு எதிரான திட்டங்கள் மற்றும் ஒன்றிய அரசுக்கு எதிராக உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஷாஜகான், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் காணீக்கூர் செல்லப்பாண்டி, புனவாசல் ராஜேந்திரன் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் தெற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர். முன்னாள் சேர்மன் பிரபாகரன் தலைமையில் பல்வேறு இடங்களில் திமுகவினர் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
+
Advertisement