கீழக்கரை, ஆக.15: நாட்டின் சுதந்திர தினவிழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் ஏர்வாடி தர்ஹா அலங்கார வாசலில் தேசியக் கொடி நிறத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதனை தர்ஹாவிற்கு வரக்கூடிய யாத்திரீகர்கள், பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இதையடுத்து ஏர்வாடி தர்ஹாவில் ராமநாதபுரம் மாவட்ட டவுன் காஜி சலாவ ஹூத்தீன் ஆலிம் தலைமையில் தர்ஹா ஹக்தார் நிர்வாகசபை தலைவர் அகமது இப்ராஹிம், செயலாளர் சித்தீக்லெவ்வை, துணை தலைவர் மகமது சுல்தான் ஆகியோர் முன்னிலையில் தர்ஹா நிர்வாக ஹக்தார்கள் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை செய்து தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்குமாறு ஏர்வாடி தர்ஹா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் கேட்டுக் கொண்டார்.
+
Advertisement