சிங்கம்புணரி, அக்.9: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் வலசைப்பட்டியில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை சாத்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான சாத்தரை திருவிழா கடந்த செப்.23ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. வலசைப்பட்டியில் கிராமத்தினர் முசுண்டப்பட்டி வேளாளர் வம்சாவளியினரிடம் பிடிமண் கொடுத்து அம்மன் உருவம் செய்யப்பட்டது. முசுண்டபட்டியில் செய்யப்பட்ட முத்தாலம்மன் சிலை பாரம்பரிய முறைப்படி ஊர்வலமாக வலசை பட்டி கிராமத்திற்கு அழைத்து வந்து முத்தாலம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது. சப்பரத்தில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருமண தடை நீங்கவும், குழந்தை வரம் வேண்டியும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தீபம் ஏற்றிய மாவிளக்கு சட்டி எடுத்தும், ஆண்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும் முத்தாலம்மனை வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
+
Advertisement