திருப்புவனம்,நவ.7: திருப்புவனம் நெல்முடி கரையில் நேற்று ஒரே நாளில் 3 பேரை நாய் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனம் நெல்முடி கரையை சேர்ந்த சுந்தராம்பாள்(82) வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நாய் மூதாட்டியை தலையில் கடித்து குதறியதில் பலத்த காயம் அடைந்தார். திருப்புவனம் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப் பட்டுள்ளார். மூதாட்டியுடன் அதே பகுதியை சேர்ந்த சரசு(75), ஹேமலதா(26) ஆகியோரையயும் அந்த நாய் கடித்துள்ளது. அவர் களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. திருப்புவனம் தெருக்களில் நாய்கள் பெருகி பொதுமக்களை கடித்து வருகிறது. நாய்களை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement

