சிவகங்கை,நவ.6: புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படவுள்ளது. அதில், புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டம் பொதுப்பிரிவின் கீழ் 1எக்டேருக்கு 40சதவீத மானியத்தில், ஒரு அலகிற்கான விலை ரூ.7லட்சம் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது. எனவே, புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் நபர்கள் சிவகங்கை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு 93848 24553, 97906 56919 என்ற எண்களில் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
+
Advertisement
